'வெல்லும் தமிழகம்' பெயரில் அர்ஜுன் சம்பத் பிரசார பயணம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மூன்று அடி வேலுடன் நேற்று வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார்.
பின் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில், 'வெல்லும் தமிழகம்' என்கிற தலைப்பில் பிரசார இயக்கம் திருத்தணியில் துவங்கியுள்ளோம். வரும், 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை வெல்லும் தமிழகமாக மாற்றுவதற்கும், பிரசார பயணம் துவங்கி உள்ளோம். இந்த பிரசாரம் பயணம் மாவட்டம் தோறும் சென்று தெருமுனை கூட்டங்களை நடத்தும்.
தி.மு.க., ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை.
பிரதமர் மோடி மத்தியில் நல்லாட்சி செய்து வருகிறார். அதேபோல் மாநிலத்திலும் நல்லாட்சி ஆன்மிக ஆட்சியாக மலர வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியில், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற மயிலாப்பூர் கோவில் பணத்தை எடுத்து, கல்லுாரி கட்டுகிறார்.
கட்சி பிரசாரத்திற்கு கோவில் பணத்தை பயன்படுத்துகின்றனர். இதை ஹிந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளுக்கு கனிமக் கொள்ளை செய்துள்ளனர். இதில், அமைச்சர் துரைமுருகன் மீது பெரிய குற்றச்சாட்டு உள்ளது.
ஆடு, மாடுகளை காப்பாற்றுவோம் எனக்கூறும் நாம் தமிழர் கட்சி சீமான், பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறார்.
ம.தி.மு.க., - வி.சி., - கம்யூ., கட்சிகளை மொத்தமாக தி.மு.க., விழுங்கி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு
-
வனத்தில் 615 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
-
கோகுலநாத இந்து மகாஜன பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்
-
இரட்டிப்பு பணம் தருவதாக 'ஆசை' கூட்டம் போட்ட கும்பல் சுற்றிவளைப்பு
-
'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்'
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை