ரகசியத்தை வெளியிட அவகாசம் தேவை தேர்தல் கூட்டணிக்கு சீமான் அச்சாரம்

சென்னை: முதல்வர் ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி உடன் இருந்தார்.
சந்திப்புக்கு பிறகு சீமான் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து மறைவு தொடர்பாக, முதல்வரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசியல் எதுவும் பேசவில்லை. அரசியல், கொள்கை, நிலைப்பாடுகளை தாண்டி உறவு இருக்கிறது.
கொள்கை, நிலைப்பாடு, பாதை, பயணம் வெவ்வேறாக இருந்தாலும், பாசம் ஒன்றுதான். ஒருநாள் நீண்ட நேரம் வெயிலில் நின்றதால், நான் மயங்கி விழுந்து விட்டேன்.
அதன்பிறகு என்னை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், 'உடல்நலத்தை சரியாக கவனிப்பதில்லையா?' என அன்பாக விசாரித்தார். என் தந்தை இறந்தபோது, தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
தமிழகத்தில் ஜாதிய தீண்டாமையை விட, அரசியல் தீண்டாமை அதிகம் இருக்கிறது.
கொள்கை கோட்பாடு வேறு; மனித உறவும், மாண்பும் வேறு என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
தேர்தல் முடிவில் கிடைக்கும் எம்.எல்.ஏ., சீட்களை வைத்துதான், கூட்டணி ஆட்சியை தீர்மானிக்க முடியும். அப்போதுதான் அந்த கருத்துக்கு வலிமை கிடைக்கும்.
ஐந்து அல்லது ஆறு சீட்களை, நாம் தமிழர் கட்சி ஜெயித்தால், என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
ராணுவ ரகசியங்களை போல், கட்சிக்கும் சில ரகசியங்கள் இருக்கின்றன.
அதை வெளியிட அவகாசம் தேவை. எனது பயணம், பாதை மாறிவிட்டது. அதனால், விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் எழவில்லை.
இவ்வாறு சீமான் கூறினார்.
மேலும்
-
ரஷ்யாவில் பயிலும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப கட்டாய பயிற்சியா; மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை
-
மீன் வாங்க ஆர்வம்
-
சேவல் சண்டை; 10 பேர் கைது
-
ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு
-
வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்
-
தபால்துறை ஓய்வூதியர் பேரவை கூட்டம்