ஜி.பி.எப்., தொகைக்கு 7.1 சதவீத வட்டி அறிவிப்பு

சென்னை: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஜூலை 1 முதல் செப்., 30 வரையிலான காலத்திற்கு, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதே போன்ற பிற வைப்பு நிதிகளில், சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, 7.1 சதவீத வட்டி நிர்ணயித்துள்ளது.

அதை பின்பற்றி, தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி செலுத்திய சந்தாதாரர்களுக்கு, செப்., 30 வரை 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

Advertisement