குடியிருப்பு வீடுகள் திட்டப்பணி கலெக்டர் அறிவுரை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில், பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்பு வீடு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வரும் 2025-26 ம் ஆண்டில் துவங்கப்பட்ட புதிய குடியிருப்பு வீடு கட்டுமானப் பணிகளையும், நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.