வைகை ஆற்றிற்குள் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நோய் அச்சம்

திருப்புவனம் : திருப்புவனம் வடகரையில் குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வராததால் கிராம மக்கள் குப்பையை அருகில் உள்ள தடுப்பணையில் கொட்டி வருகின்றனர்.

திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சியில் வடகரை கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர். தினசரி இப்பகுதியில் குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நான்கு வருடங்களுக்கு முன் ஒருசிலர் வந்து குப்பைகளை சேகரித்தனர். கடந்த நான்கு வருடங்களாக குப்பை சேகரிக்க யாருமே வருவதில்லை. வடகரையில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு ஆண்கள் பள்ளிகள் உள்ள நிலையில் குப்பைகளை சேகரிக்க யாருமே வராததால் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு வழியின்றி அருகில் உள்ள வைகை ஆறு தடுப்பணையில் கொட்டிவிட்டு மாசு படுத்துகின்றனர்.

Advertisement