தேவகோட்டையில் ஆக.8ல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்

தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி காரணமாக தற்போதைய பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் இரண்டையும் இடித்து விட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளது. இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சிவன் கோயில் ஊரணி கிழக்கு பகுதியில் ஆக.,8 முதல் செயல்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படும். பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள கடைகள் ஓரிரு நாட்களில் அகற்றிக்கொள்ள கூறியுள்ளனர்.

Advertisement