ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை

ஒரு பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் வருவர், செல்வர். ஆனால் இவர்களில் நினைவில் நிரந்தரமாக தங்குவது சிலர் மட்டுமே. இந்த வரிசையில் சேர்ந்துள்ளவர் அஜித். இவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் இவரை பள்ளி இப்போதும் மறக்கவில்லை. அவரை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் கராத்தே போட்டிகள் நடத்துகிறது.
மைசூரு நகரின், சரஸ்வதி புரத்தில் மஹாபோதி பள்ளி உள்ளது. இப்பள்ளி மிகவும் பிரபலமானது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள், இந்த பள்ளிக்கு வந்து கல்வி கற்கின்றனர். பள்ளியில் கராத்தே உட்பட, பல்வேறு கலைகளும் கற்றுத்தரப்படுகின்றன. விடுதி வசதியும் உள்ளது.
இதே பள்ளியில் அஜித் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் கராத்தே மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளிலும் திறன் மிக்கவர்.
பள்ளி சார்பில் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளார். இவரால் பள்ளிக்கு பெருமை கிடைத்தது. ஆனால் எதிர்பாராவிதமாக அவர் அகால மரணம் அடைந்தார்.
இதனால் பள்ளி நிர்வாகமும், நண்பர்களும் அடைந்த வருத்தத்துக்கு அளவே இல்லை. அவர் இறந்து 15 ஆண்டுகளாகியும், பள்ளி அந்த மாணவரை மறக்கவில்லை. அவரை நினைவு கூரும் வகையில், அவரது பெயரில் ஆண்டு தோறும் கராத்தே போட்டி நடத்துகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்குகிறது.
கல்வியில், விளையாட்டுகளில் சாதனை செய்தாலும், மாணவர்களை பள்ளிகள் நினைவுகூர்வது அபூர்வம். தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் இறந்து, 15 ஆண்டுகளாகியும் அவரை மறக்காததுடன், அவரை நினைவு கூரும்ம் வகையில், கராத்தே போட்டி நடத்துவதன் மூலம், மஹாபோதி பள்ளி முன் உதாரணமாக விளங்குகிறது.
- நமது நிருபர் -
மேலும்
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தகவல்
-
கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
-
ரோந்து பணிக்கு தனியாக செல்லாதீங்க:போலீசாருக்கு அதிகாரிகள் 'அட்வைஸ்'
-
மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு
-
ஆய்வக உதவியாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி: பட்டதாரி கணினி ஆசிரியர்களுக்கு 'பை பை'