ஆசிய போட்டியில் பதக்கம் கார்வார் ஆணழகன் ஆசை

உத்தர கன்னடா, கார்வாரை சேர்ந்தவர் அமன் ரபிக் ஷேக், 21. இவர், கார்வாரில் உள்ள பாபுஜி கிராமின் விகாஸ் சமிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பிரபல 'பாடி பில்டர்' அர்னால்டை பார்த்து உத்வேகம் அடைந்து உள்ளார். அவரை போல, உடலை மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக உடற்பயிற்சி செய்ய துவங்கினார்.
இந்த பயிற்சி, நாளடைவில் அவரை ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தது. கல்லுாரி பருவத்தில், ஆணழகன் போட்டிகளில் பங்கு பெற்றார். கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று உள்ளார். இதன் காரணமாக தேசிய அளவிலான பல பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடக்கும் ஆணழகன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்.
85 கிலோ கடந்த மார்ச்சில் கேரளாவின் காலடியில் உள்ள ஸ்ரீ சங்காராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடந்த, தேசிய அளவில் பல பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டார்.
இதில், 85 கிலோ பிரிவில் போட்டியிட்டு முதல் இடத்தை பிடித்தார். இது கர்நாடகாவுக்கு பெருமையை பெற்று தந்தது.
சமீபத்தில், உத்தர கன்னடாவில் நடந்த கர்நாடக பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், 80 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியிலும் முதல் இடத்தை பெற்றார். மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள் உட்பட பல போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளார்.
அம்மா இந்த பயணம் குறித்து அமன் கூறுகையில், “ஆணழகன் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று, சாதிக்க வேண்டும். ஆசிய போட்டியில் பதக்கம் பெற வேண்டும். நல்ல வேலையை பெற்று, என் அம்மாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை,” என்றார்.
மூன்றே வரிகளில் தனது வாழ்க்கையின் அர்த்தத்தை பற்றி தெளிவாக கூறினார். இவரை போல, நாமும் நம் வாழும் வாழ்வுக்கான அர்த்தத்தை கட்டாயம் தெரிந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயமே.
- நமது நிருபர் -
மேலும்
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தகவல்
-
கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
-
ரோந்து பணிக்கு தனியாக செல்லாதீங்க:போலீசாருக்கு அதிகாரிகள் 'அட்வைஸ்'
-
மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு
-
ஆய்வக உதவியாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி: பட்டதாரி கணினி ஆசிரியர்களுக்கு 'பை பை'