போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய சத்துணவு அமைப்பாளர் மீது வழக்கு

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் புள்ளிமான் கோம்பையை சேர்ந்தவர் சீதாலட்சுமி 50. இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 28.1.2011ல் சத்துணவு அமைப்பாளராக சேர்ந்து பணி செய்தார். இவர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரின் கல்விச் சான்றிதழ்களை, உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. சான்றிதழ்கள் சரிபார்ப்பில் அவரது 10ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் சில ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி பி.டி.ஓ.,முருகேஸ்வரி போலீசில் புகார் செய்தார். சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement