முதல்வர் கோப்பை விழிப்புணர்வு ஊர்வலம்  ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: தமிழக முதல்வர் கோப்பைக்கான டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று ராமநாதபுரம் வந் தடைந்தது.

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. இதற்கான விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலத்தை துணை முதல்வர் உதயநிதி ஆக.,15 சென்னையில் துவக்கி வைத்தார்.

விழுப்புரம், திருச்சி, காரைக்குடி வழியாக நேற்று ராமநாதபுரம் வந்த னர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குழுவின் ஒருங் கிணைப்பாளர் நிவேதா கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவாக நடக்கவுள்ளது.

தமிழகம் முழுவதும் நடக்கும் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 1200 கி.மீ., சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.

அடுத்த கட்டமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம் என்றார். ராமநாதபுரம் மாவட்ட அலுவலர் தினேஷ் குமார், நகராட்சி தலைவர் கார் மேகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்பதிவு நீட்டிப்பு தமிழக முதல்வர் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு ஜூலை 14ல் துவங்கியது. இதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைய வுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன் பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆன்லைன் முன்பதிவு ஆக.,20 இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://cmtrophy.sdat.in, http://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாகவும், மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லுாரி வழியாக வும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகம், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.

Advertisement