காட்டு மாடுகள் மோதலை ரசித்த சுற்றுலா பயணிகள்

மூணாறு; பாம்பாடும்சோலை தேசிய பூங்காவில் புல் மேடுகளில் முகாமிடும் காட்டு மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிசயித்து வருகின்றனர்.

மூணாறு, வட்டவடை ரோட்டில் டாப் ஸ்டேஷன் அருகே பாம்பாடும்சோலை தேசிய பூங்காவின் எல்லை ஆரம்பமாகிறது. டாப் ஸ்டேஷனில் இருந்து வட்டவடை செல்லும் வழியில் பாம்பாடும்சோலை வனத்துறை அலுவலகம் உள்ளது. அப்பகுதி முழுதும் புல்மேடுகளால் சூழப்பட்டுள்ளதால், அங்கு காலை, மாலையில் மாட்டு மந்தையைப் போன்று காட்டு மாடுகள் நூற்றுக் கணக்கில் முகாமிடும். மாலையில் வரும் காட்டு மாடுகள் இரவு முழுதும் தங்கி விட்டு காலையில் தான் கலைந்து செல்லும். புல்மேடுகளில் முகாமிடும் காட்டு மாடுகள் அவ்வப்போது ஒன்றோடு ஒன்று பலமாக மோதிக் கொள்ளும். பல மணி நேரம் நீடிக்கும் மோதலை வட்டவடை செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து அதிசயித்து வருகின்றனர்.

Advertisement