ரெகுநாதபுரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு கே.ஜி., மாணவர்கள் ஏராளமானோர் கிருஷ்ணன் ராதை வேடமணிந்து பங்கேற்றனர். பள்ளியில் கயிறு இழுத்தல், உறி யடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா, துணை முதல்வர் முத்துக்கண்ணு உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்ட னர். கிருஷ்ண ஜெயந்தி விழாவின் மகத்துவம் பற்றி விளக்கி கூறப்பட்டது விழாவில் ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

Advertisement