யானைகளால் பள்ளி கட்டடம் சேதம்

மூணாறு; மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி கட்டடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தின. அந்த பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நயமக்காடு எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட மூன்று காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு 12:45 மணிக்கு பள்ளி வளாகத்தினுள் நுழைந்தது. பள்ளியில் கட்டடம், இரண்டு ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்திய யானைகள் சமையல் அறையையும் சேதப்படுத்தின.

சமையல் அறையில் 15 நாட்களுக்கான மதிய உணவுக்கு வைத்திருந்த அரிசி உட்பட உணவு பொருட்களையும், பாத்திரங்களையும் சேதப்படுத்தின. அதன்பிறகு பள்ளி அருகே தலைமை ஆசிரியை வசிக்கும் வீட்டையும் சேதப்படுத்திவிட்டு காட்டிற்குள் சென்றன. மூணாறு வனத்துறையினர் நேற்று பள்ளியை பார்வையிட்டனர்.

Advertisement