துாத்துக்குடியில் பசுமை அமோனியா ஏற்றுமதி ஸ்பிக் நிறுவனம் திட்டம்

சென்னை:ஸ்பிக் நிறுவனம், துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து, பசுமை அமோனியாவை ஏற்றுமதி செய்யத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுஉள்ளது.

இதுதொடர்பாக ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர் அஷ்வின் முத்தையா, வ.உ. சிதம்பரனார் துறைமுகத் தலைவர் சுசாந்தா குமார் புரோஹித்துடன் சமீபத்தில் பேச்சு நடத்திஉள்ளார்.

அப்போது, பசுமை அமோனியா ஏற்றுமதிக்காக பிரத்யேக வசதி கள் அமைப்பது குறித்தும், ஸ்பிக் நிறுவனத் தின் 45 லட்சம் டன் சரக்குகளை கையாளும் வகையில், துறை முகத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் காலாண்டில், நிறுவனம் 1.92 லட்சம் டன் யூரியாவை உற்பத்தி செய்திருந்த நிலையில், 1.86 லட்சம் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement