ஆசிய கோப்பை அணியில் சுப்மன் கில் * ஷ்ரேயசிற்கு இடமில்லை

மும்பை: ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்
ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய சுப்மன் (754 ரன்), பிரிமியர் 'டி-20' தொடரில் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக 650 ரன் (ஸ்டிரைக் ரேட் 156) எடுத்தார். இதையடுத்து சுப்மன் கில், துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
'டாப் ஆர்டரில்' சஞ்சு சாம்சன் (கீப்பர்-பேட்டர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, 'ஆல்-ரவுண்டராக' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே இடம் பிடித்தனர். ரிங்கு சிங் இடத்தை தக்க வைத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா இடம் பெற்றனர்.
'சுழலில்' வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது விக்கெட்கீப்பராக ஜிதேஷ் சர்மா வாய்ப்பு பெற்றார். வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் சேர்த்து, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்த, ஷ்ரேயஸ் சேர்க்கப்படவில்லை.
மாற்று வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரல், ஜெய்ஸ்வால் உள்ளனர்.
அணி விபரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் வர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங்.
மேலும்
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி உடன் சந்திப்பு
-
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
-
கொடுப்பது முடியல்ல,அது வாழ்நாள் நம்பிக்கை...
-
தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்துக்குதறியது; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
-
40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
குடும்ப தகராறு: குழந்தைகளுடன் தந்தை தற்கொலை