டி.ஆர்.பாலு மனைவி மறைவு; முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

9

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் பொருளாளருமான டி.ஆர். பாலுவின் மனைவியும், டி.ஆர்.பி., ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 80.

திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி. இவர் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் ஆவார். இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரது உடல் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவிற்கு திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலுவின் மறைவால் வேதனை அடைந்தேன்.

டிஆர்பாலுக்கும், டிஆர்பி ராஜாவுக்கும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement