இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...

மும்பை: உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தொடர்கிறார்.
இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் (50 ஓவர், செப். 30-நவ. 2) நடக்க உள்ளது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (செப். 30) இலங்கையை சந்திக்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு முதன் முறையாக உலக கோப்பை (19 வயது) வென்று தந்த துவக்க வீராங்கனை ஷைபாலி சேர்க்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா, மீண்டும் அணிக்கு திரும்பினார்.
அணி விபரம்:ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்) பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ஜெமிமா, ரேணுகா, அருந்ததி, கிராந்தி கவுடு, அமன்ஜோத் கவுர், ராதா, யஸ்திகா, ஸ்ரீசரனி, ஸ்னே ராணா.
மாற்று வீராங்கனைகள்: தேஜல், பிரேமா, பிரியா, உமா, மின்னு மாணி, சயாலி.
ஆஸி., தொடரில் சயாலி
உலக கோப்பை தொடருக்கு முன் சொந்த மண்ணில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பை அணியில் இடம் பெற்ற ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ரேணுகா, அருந்ததி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுடு, ராதா, ஸ்ரீசரனி, யஸ்திகா, ஸ்னே ராணா சேர்க்கப்பட்டனர். அமன்ஜோத் கவுருக்குப் பதில், சயாலிக்கு வாய்ப்பு தரப்பட்டது.
மேலும்
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி உடன் சந்திப்பு
-
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
-
கொடுப்பது முடியல்ல,அது வாழ்நாள் நம்பிக்கை...
-
தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்துக்குதறியது; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
-
40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
குடும்ப தகராறு: குழந்தைகளுடன் தந்தை தற்கொலை