தேசிய விளையாட்டு தின போட்டிகள்

தேனி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஆக.29 முதல் 31 வரை தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் உத்தரவில் தபால் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் எஸ்.ஏ.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

இதில் தபால்துறை பணியாளர்கள் கோ கோ, கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடந்தன. தபால்துறை ஊழியர்கள் தேசிய விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

'பிட் இந்தியா இயக்கம்' தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த தபால்ஊழியர்கள் சைக்கிள் ஊர்வலங்களிலும் பங்கேற்றனர்.

Advertisement