ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

ஹாங்சோவ்: சீனாவின் ஹாங்சோவ் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. அதன்பின் ஜப்பான் (செப். 6), சிங்கப்பூர் (செப். 8) அணிகளை எதிர்கொள்கிறது. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா அணிகள் இடம் பெற்றுள்ளன.
சலிமா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோல்கீப்பர் சவிதா புனியா (கணுக்கால்), தீபிகா (தொடையின் பின்பகுதி) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் காயத்தால் விலகியது பின்னடைவு. கோல்கீப்பராக பிச்சு தேவி களமிறங்கலாம். நவ்னீத் கவுர், உதிதா, நேஹா, லால்ரெம்சியாமி உள்ளிட்ட சீனியர் வீராங்கனைகள் கைகொடுத்தால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
@quote@
பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கியில் தென் கொரியா (1985, 1994, 1999), ஜப்பான் (2007, 2013, 2022) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றன. இந்தியா (2004, 2017), சீனா (1989, 2009) தலா 2 முறை கோப்பையை கைப்பற்றின.quote
மேலும்
-
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
-
தேர்தலுக்காக காஞ்சிபுரம் வந்த 598 'விவிபேட்' இயந்திரங்கள்
-
இன்று இனிதாக ...( 05.09.2025) புதுடில்லி
-
'ரீல்ஸ்' வெளியிட்ட மனைவியை அடித்து கொன்ற கணவன்
-
பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்
-
ஜி.எஸ்.டி., குறைப்பு பொருளாதாரத்திற்கு முக்கிய வரப்பிரசாதம்