கிணற்றில் இறந்து கிடந்த ஆண் மயில்



ஆத்துார், :ஆத்துார், அம்மம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மோகன், 50. இவரது விவசாய கிணற்றில் நேற்று மதியம், 3:30 மணிக்கு ஆண் மயில் தவறி விழுந்து இறந்து கிடந்தது.


இதை அறிந்து, அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இறங்கி, மயிலின் உடலை மீட்டு, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயில் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement