குறளிசை காவியம் வெளியிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, செப். 8-
திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில், குறளிசை வெளியிட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில், குறளிசை காவியம் படைத்துள்ள இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன்.
இசையில் தோய்ந்து, பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தை அனைவரும் கேட்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement