அ.தி.மு.க., குழுக்கள் இணையாது: சண்முகம்

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என, பல குழுக்களாக அ.தி.மு.க.,வினர் உள்ளனர். தற்போது, புதிதாக, செங்கோட்டையன் குழு உருவாகி இருக்கிறது.

அ.தி.மு.க.,வை ஒட்ட வைக்கும் முயற்சிக்கு இடையே, மேலும் ஒரு கோஷ்டி உருவாகி இருக்கிறது.

அனைவரும், அவரவர் சுயநலத்தில் இருந்து, இந்த பிரச்னையை பார்க்கின்றனர். அதனால், அ.தி.மு.க., குழுக்கள் இணைய வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,வை துண்டு, துண்டாக ஆக்கும் பின்னணியில் பா.ஜ.,தான் செயல்படுகிறது. இதை, அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து, அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை தவிர, வேறு எவ்வித கொள்கை அடிப்படையும் அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு கிடையாது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என, பழனிசாமி சொல்கிறார்.

பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, அமைக்கும் கூட்டணியில் இருப்போர், இப்படி தான் பேசுவர். அதனால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி பலவீனமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement