அரசியலில் மிகப்பெரிய உந்துசக்தியாக விஜய்

இந்தியா முழுதும் மாநில கட்சிகளில் பிளவுகளை, பா.ஜ., ஏற்படுத்தி இருப்பதால், அ.தி.மு.க., பிரச்னையில் பா.ஜ., இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர், அரசியலில் மிகப்பெரிய உந்துசக்தியாக இருப்பார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., போல் முதன்மையான இடத்தை அடைவது, அவரின் செயல்பாடுகளை பொறுத்தே அமையும்.
டாஸ்மாக்கில், 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுவதற்கு ஆதாரங்கள் வேண்டும். சட்டரீதியாக நிரூபணம் ஆகும்வரை, உண்மையா, பொய்யா என கூற முடியாது. தவறே இல்லாமல் அரசை நடத்துவது கஷ்டம்.
- துரை, முதன்மை செயலர், ம.தி.மு.க.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement