ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி பங்களாமேட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 108 சேவை வழங்கும் தனியார் நிறுவன நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ள ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். மாவட்ட நிர்வாகிகள் பாண்டி, மாரிச்சாமி, வையத்துரை, ஆதிசிவபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement