மாணவர் விசா பெற மோசடி வாலிபர் கைது

சென்னை, தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கோத்தகுேடம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அங்கதி, 30, என்பவர், மாணவர் விசா பெறுவதற்காக, கல்வி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ், வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை, சென்னை அமெரிக்க துாதரகத்தில் போலியாக சமர்ப்பித்து உள்ளார்.

இது குறித்து சென்னை அமெரிக்க துாதரகத்தின் துணை மண்டல பாதுகாப்பு அதிகாரி ஐசக் எம்மெட் புகாரையடுத்து, போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார், ஸ்ரீகாந்த் அங்கதியை நேற்று கைது செய்தனர்.

இதுபோல் போலி ஆவணங்களை வைத்து, கொல்கட்டா, டில்லி, ஹைதரா பாத், மும்பை ஆகிய மாநிலங்களில் உள்ள அமெரிக்க துாதரகங்களில் ஏற்கனவே ஒன்பது முறை சமர்ப்பித்து உள்ளார். 10வது முறையாக சென்னையில் விண்ணப்பித்த போது பிடிபட்டுள்ளார்.

Advertisement