டேவிஸ் கோப்பை: இந்தியா அபாரம்

பைல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் வெற்றி பெற்றார்.
சுவிட்சர்லாந்தில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் சுரேஷ், சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய தக் ஷினேஸ்வர், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய தக் ஷினேஸ்வர் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மதுரையை சேர்ந்த தக் ஷினேஸ்வர் 25, டேவிஸ் கோப்பையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், சுவிட்சர்லாந்தின் மார்க்-ஆன்ட்ரியா ஹஸ்லர் மோதினர். இதில் சுமித் நாகல் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
மேலும்
-
மஹாராஷ்டிரா கூடுதல் கவர்னராக பொறுப்பேற்றார் குஜராத் கவர்னர் தேவவிரத்
-
தெரு நாய்க்கடியால் 22 பேர் உயிரிழப்பு: 3.60 லட்சம் பேர் பாதிப்பு
-
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
-
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
-
கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை
-
மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது