மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் ரூ. 2.7 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.2.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், சிறுபான்மையின ஆணைய துணை தலைவர் அப்துல்குத்துாஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், டாம்கோ திட்டத்தின் கீழ் 12 மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் பயனாளிகளுக்கு கடனுதவிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினர் அட்டை என மொத்தம் 266 பயனாளிகளுக்கு ரூ. 2.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து சிறுபான்மையின பிரதிநிதிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. புதிய ரேஷன் கார்டு வழங்கல், பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், சி.இ.ஓ., கார்த்திகா, சப்கலெக்டர் ஆனந்த்குமார் சிங், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இயல்பு நிலைக்கு மாறிய நேபாளம்; முக்கிய துறைகளுக்கு 3 அமைச்சர்கள் நியமனம்
-
முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
-
விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் …: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
-
பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு