நாட்டின் மீதான அந்தப் பார்வையை மாற்ற வேண்டும்; சசி தரூர்

மும்பை:பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஸ்கல் இந்தியா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் எம்பி சசி தரூர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நாம் பல விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளன. சுற்றுலா மிகவும் முக்கியமானது.இது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இது அரசின் வருவாயை அதிகரிக்கும். நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்றது என்ற ஒரு பிம்பம் நம் நாட்டிற்கு உள்ளது. இந்த பிம்பத்தை மாற்ற வேண்டும். சுற்றுலா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் காவலர் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். நம்மிடம் உயர்தரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது மிக மோசமான தரம் கொண்ட ஹோட்டல்கள் உள்ளன. ஆனால், நடுத்தர வசதி கொண்ட ஹோட்டல்கள் எதுவும் இல்லை. நிறைய ஹேட்டல்கள் கட்ட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
மழையில் நெல்லை வீணாக்குவது அரசுக்கு அழகா?
-
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
த.வெ.க., கூட்டணியில் 60 'சீட்'; அ.ம.மு.க., நடத்திய ரகசிய பேச்சு
-
'தி.மு.க.,வின் மரபணுவில் ஊறிப்போன திருட்டு, சுரண்டல்'
-
அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
-
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மரக்காணத்தில் பரபரப்பு