அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள்: சிறு தொழில் நிறுவனங்கள் தவிப்பு

1

சென்னை : 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:


பல தொழில் நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளில் கடன் வாங்குகின்றன. இந்தக் கடனை முன்கூட்டியே அடைக்கும் போதும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை, வேறு வங்கிக்கு மாற்றும் போதும், 'பிரிகுளோசர், டேக் ஓவர் சார்ஜ்' கட்டணமாக, மொத்த கடன் தொகையில், 4 சதவீதம் வசூலிக்கின்றன; இது, மிகவும் அதிகம்.


மேலும், ஆண்டுதோறும் வங்கி கடனை புதுப்பிக்குமாறு கூறி, அதற்கு மொத்த கடனில், 0.50 சதவீதம் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்காக, சொத்து பதிவு செய்வதற்கு, பதிவு துறைக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.


இது, பல்வேறு செலவுகளால் சிரமப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, கூடுதல் சிரமத்தை உருவாக்குகிறது.




ஆண்டுதோறும் புதுப்பித்தல், பதிவு துறையில் கடன், அடமானம் பதிவு செய்வது போன்ற நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும், முன்கூட்டியே கடனை அடைக்க, அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement