செம்பை வைத்தியநாத பாகவதர் 2 நாள் சங்கீத உற்சவம் நிறைவு

பாலக்காடு: ''கர்நாடக இசைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் செம்பை வைத்தியநாதர்,'' என்று கேரள முன்னாள் கலாசாரத் துறை அமைச்சர் பாலன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி செம்பை கிராமத்தில்
செம்பை வைத்தியநாத பாகவதரின் 129-வது பிறந்தநாள் விழாவையொட்டி, நேற்று நடந்த செம்பை வித்யா பீடம் 39-வது ஆண்டு மாநாட்டில், முன்னாள் கலாசாரத்துறை அமைச்சர் பாலன் பேசுகையில், ''கர்நாடக இசைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் செம்பை வைத்தியநாதர். அவர் 20ம் நூற்றாண்டின் பாரம்பரிய இசைத் துறையில் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட நபராவார். அவர் ஏழைகளின் இடையே இசையைக் கொண்டு சென்றவர்,'' என்றார்.
நிகழ்ச்சியில் தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகித்தார். குழல்மன்னம் வட்டார ஊராட்சித்தலைவர் தேவதாஸ், இசைக்கலைஞர் மாலினி ஹரிஹரன், மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், காயத்ரி தம்பான், சைனுதீன் பத்திரிப்பாலா, செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. முன்னதாக நேற்று காலை, 8:15 மணி முதல் இசைக்கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 11:45 மணிக்கு மாலினி ஹரிஹரனின் இசைக்கச்சேரி நடந்தது.
கொல்லம் ஸ்ரீஜித் (வயலின்), குழல்மன்னம் ராமகிருஷ்ணன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்}தனர்.
200க்கும் மேற்பட்ட இளம் இசை கலைஞர்கள் பங்கு கொண்ட இரு நாள் சங்கீத உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும்
-
மஹாராஷ்டிரா கூடுதல் கவர்னராக பொறுப்பேற்றார் குஜராத் கவர்னர் தேவவிரத்
-
தெரு நாய்க்கடியால் 22 பேர் உயிரிழப்பு: 3.60 லட்சம் பேர் பாதிப்பு
-
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
-
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
-
கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை
-
மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது