ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

2


ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Advertisement