நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

ராஞ்சி: நக்சல் பிரச்னைகளில் இருந்து இந்தியா மிக விரைவில் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் முக்கியப்புள்ளி சஹ்தேவ் சோரன் என்ற பர்வேஷ் ஒழிக்கப்பட்டுள்ளான்.
கூடுதலாக சஞ்சல் என்ற ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் என்ற பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் இருந்து நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு நாடும் நக்சல் பிரச்னையிலிருந்து விடுபடும்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.



மேலும்
-
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
-
மஹாராஷ்டிரா கூடுதல் கவர்னராக பொறுப்பேற்றார் குஜராத் கவர்னர் தேவவிரத்
-
தெரு நாய்க்கடியால் 22 பேர் உயிரிழப்பு: 3.60 லட்சம் பேர் பாதிப்பு
-
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
-
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
-
கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை