இந்திய கம்யூ., போராட்டம்

கடலுார் : கடலுார் பஸ் ஸ்டாண்டில் இந்திய கம்யூ., கட்சியினர் நுாதன போராட்டம் நடத்தினர்.

கடலுார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிவறைகளிலிருந்து, வெளியாகும் கழிவுகள் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக செல்கிறது. கழிவுநீர் நாகம்மன் கோவில் எதிரில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்து இந்திய கம்யூ., மாநகர செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள், கழிவுநீர் கால்வாயில் மலர் துாவி நுாதன போராட்டம் நடத்தினர். கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement