புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது: பிரதமர் மோடி சவால்

போபால்: புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதி தனது துயரத்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்ததை தேசமும், உலகமும் பார்த்தது.
மண்டியிட செய்தது
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிட செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும். பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது.
ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
25 கோடி மக்கள்
1948ம் ஆண்டு இதே நாளில், நமது ராணுவம் ஹைதராபாத்தை விடுவித்து இந்தியாவின் பெருமையை மீட்டெடுத்தபோது சர்தார் வல்லபாய் படேலின் உறுதியான மன உறுதி வெளிப்பட்டது. 140 கோடி இந்தியர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












மேலும்
-
மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்
-
ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்
-
இணைய தாக்குதல் எதிரொலி; ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு
-
துாத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
-
கட்சி அலுவலகத்தில் பாஜ கவுன்சிலர் தற்கொலை: கேரள அரசியலில் பரபரப்பு