இணைய சேவை ஆப்கானில் தடை

1

காபூல்: ஒழுக்கக் கேடைத் தடுப்பதற்காக இணைய சேவைக்கான தடையை ஆப்கானிஸ்தான் முழுதும் நீட்டிப்பதாக, தலிபான் அரசு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

இதையடுத்து அங்கு தலிபான்கள் ப ல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகின்றனர்.

பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதையும், பல துறைகளில் பணிபுரிவதையும் தடுப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மொபைல்போன் வாயிலான இணைய சேவைகள் இயக்கத்தில் இருந்து வந்த நிலையில், ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இணைய சேவை முடக்கப்படுவதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 16ம் தேதி, முதலில் வடக்கு பால்க் மாகாணத்தில் வைபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மற்ற மாகாணங்களுக்கும் இந்தத் தடையை நீடிப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Advertisement