சென்னையில் கனமழை: விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு அடைந்தது.
மழை காரணமாக மதுரை, தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்டநகரங்களிலிருந்து சென்னை வந்த பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து மங்களூரு, கொச்சி செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்
இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, திருப்பூர் தெற்கு, திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், தலா,7; காரைக்கால், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 24 வரை மிதமான மழை தொடரலாம்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்
-
ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்
-
இணைய தாக்குதல் எதிரொலி; ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு
-
துாத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் உலக தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
-
கட்சி அலுவலகத்தில் பாஜ கவுன்சிலர் தற்கொலை: கேரள அரசியலில் பரபரப்பு