மகளிர் கல்லுாரி கபடி போட்டி

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி சிவகாசியில் நடந்தது. 23 கல்லுாரிகளின் அணிகள் கலந்து கொண்டன.

முதல் அரையிறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 39 --15 என்ற புள்ளி கணக்கில் மீனாட்சி அரசு கல்லுாரி அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி அணி 37 - 17 என்ற புள்ளி கணக்கில் பாத்திமா கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 27 - 22 என்ற புள்ளி கணக்கில் லேடிடோக் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல்வர் பால் ஜெயகர், துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர்கள் நிர்மல்சிங், ரமேஷ் வாழ்த்தினர்.

Advertisement