வெற்றிகரமாக நிறைவு பெற்றது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!

மும்பை: கன்சோலி சுரங்கப்பாதை நிறைவடைந்ததன் மூலம் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிக்கை:

மஹாராஷ்டிரா மாநிலம் ஷில்பட்டா மற்றும் கன்சோலி இடையேயான 4.88 கிமீ நீள சுரங்கப்பாதை இன்று காலை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் மூலம் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது.

இந்த பணியின்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கன்சோலி தண்டவாளத்தில் இருந்தார். இந்த சுரங்கப்பாதை, பாந்த்ரா-குர்லா வளாகத்தை (பிகேசி) ஷில்பட்டாவுடன் இணைக்கும் 21 கிமீ நிலத்தடி நீளத்தின் ஒரு பகுதியாகும்.
இதில் தானே க்ரீக்கின் கீழ் 7 கிமீ பகுதியும் அடங்கும். இந்த இணைப்புடன், சுரங்கப்பாதை இப்போது சவாலி தண்டவாளத்தை ஷில்பட்டா போர்ட்டலுடன் இணைக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement