போதைப் பொருட்களுடன் 7 வாலிபர்கள் கைது மயிலம் அருகே பரபரப்பு

மயிலம்: கூட்டேரிப்பட்டில் போதை பொருட்கள் வைத்திருந்த, 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியே பைக்கில் வந்த, 3 பேரை மடக்கி விசாரணை செய்தனர்.
விசாரணையில், கூட்டேரிப்பட்டை சேர்ந்த ரகு மகன் சரவணன் 23; கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் அரவிந்த், 21; நெடிமொழியனுார் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் வசந்தகுமார், 22; என்பது தெரிய வந்தது.
அவர்கள் வாகனத்தை ஆய்வு செய்த போது, அதில், 5 கிராம் எடையுள்ள 2 கஞ்சா பாக்கெட்டுகள், 22 போதை மாத்திரைகள், 6 இன்சுலின் சிரஞ்சுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
அவற்றையும், 4 மொபைல்போன் மற்றும் பைக் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்களுடன் தொடர்பில் இருந்த திண்டிவனம் மேல்பாக்கம் விநாயகர் மகன் சூர்யா, 19; திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன் 28; ஆதிமூலம் மகன் ஆலன் 25; காத்தவராயன் மகன் மணிகண்டன் 19; உள்ளிட்ட, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்
-
3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
-
காரீப் பயிற்சி
-
எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்
-
ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடப்பட்டன