பஞ்சாப் மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.1,600 கோடி நிவாரணம் போதாது: ராகுல்

புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி முதற்கட்ட நிவாரணம் அறிவித்திருப்பது அநீதி என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் விமர்சித்துள்ளார்.
மேகவெடிப்பு மற்றும் பருவமழை காரணமாக பெய்த கனமழையால் பஞ்சாப் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.1,600 கோடியை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்தார்.
இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வைட்ட லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சேதமடைந்த சாலைகள், பாலங்களை புதுப்பித்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அந்தப் பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது; வெள்ளத்தால் பஞ்சாப்பில் ரூ.20,000 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி ரூ.1,600 கோடியை முதற்கட்ட நிவாரணமாக அறிவித்து, பஞ்சாப் மக்களுக்கு அநீதியை இழைத்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பஞ்சாப் மக்கள் மீண்டும் தங்களின் சொந்தக்காலில் நிற்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு ஆதரவும் பலமும் மட்டுமே தேவை. உடனடியாக ஒரு பெரிய நிவாரண நிதியை அறிவிக்குமாறு பிரதமரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.











மேலும்
-
பாசிட்டிவ் செய்திகள் வந்தால் வேகமாக மீளக்கூடும்
-
டூ - வீலர், கார் விபத்து காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி., சலுகை கைவிரிப்பு
-
புதிய காரணிகள் இல்லாமல் ரூபாய் மதிப்பு உயராது
-
அக்., 21ல் தீபாவளி சிறப்பு வர்த்தகம் என்.எஸ்.இ., தகவல்
-
5 ஆண்டுகளாகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் வீணாகும் தடுப்பணை
-
மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை