கே.எம்.சி.எச்.,ல் ரோஸ் தின விழா

கோவை; கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில், 11வது ரோஸ் தின விழா நடந்தது. மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார்.
மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்குமார் கூறுகையில்,''புற்றுநோய் குறித்த தேவையற்ற அச்சத்தை தவிர்த்து, நம்பிக்கை, தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தாண்டு ரோஸ் தினம், 'புது வாழ்வு' என்கிற கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.
புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். புற்றுநோய் மையத்தில் உள்ள சிகிச்சை வசதிகள் குறித்து, விளக்கும் வீடியோ படம் திரையிடப்பட்டது.
பேச்சாளர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன், டாக்டர்கள் திவாகர், ஆனந்த் நாராயணன் உள்ளிட்டோர், நோயாளிகள் மற்றும் நோயில் இருந்து மீண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினர். புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவ நிபுணர்கள், நிர்வாக குழு ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
-
காரீப் பயிற்சி
-
எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்
-
ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடப்பட்டன