வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

கோவை; கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வெடிகுண்டு வைத்து இருப்பதாக நேற்று இ-மெயில் வந்திருந்தது. அதைப்பார்த்த அலுவலர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தெரிவித்தனர்.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது.

நீதிமன்ற வளாகத்துக்கு மட்டுமின்றி, ரேஸ்கோர்ஸில் உள்ள ஜூடீசியல் அகாடமி, உப்பிலிபாளையத்தில் உள்ள முன்னாள் படை வீரர் மாளிகை உள்ளிட்ட நான்கு இடங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கும் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.

Advertisement