ரூ.6.80 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர் :சாலைபுதுார் விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம், 6 லட்சத்து, 80,339 ரூபாய்க்கு விற்பனையானது.கரூர் மாவட்டத்தில் நொய்யல் அருகில் சாலைபுதுார் விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது.


ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 335 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 57.20 ரூபாய், அதிகபட்ச விலையாக, 73.80 ரூபாய், சராசரி விலையாக, 71.11 ரூபாய் ஏலம் போனது. மொத்தம், 10,216 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 6 லட்சத்து, 80,339 ரூபாய்க்கு விற்பனையானது

Advertisement