'பருவநிலை மாறுபாடு மிகப்பெரிய மோசடி'

பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து, டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோது அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் அதிபரானதும் மீண்டும் இணைந்தது.

இந்தாண்டு துவக்கத்தில் டிரம்ப் மீண்டும் அதிபரானதும், அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.

இந்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேலும் பேசியதாவது:

பருவநிலை மாறுபாடு பிரச்னை என்பது மிகப் பெரும் மோசடியாகும். இது தொடர்பாக ஐ.நா., உட்பட பல அமைப்புகள் பெரிய அளவில் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்தக் கணிப்புகள் தவறானவை. அவை முட்டாள்களால் உருவாக்கப்பட்டவை.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, பெட்ரோல் போன்ற படிம எரிபொருள்களுக்கு மாற்றாக பசுமை எரிசக்திக்கு மாற வேண்டும் என்கின்றனர்.

அந்த வகையில், கரியமில வாயுவைக் குறைத்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. ஆனால், இதனால் அந்த நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.

ஏதோ சிலரால், ஏதோ சில நோக்கத்துக்காக தவறாக கொடுக்கப்பட்டதே, பருவநிலை மாறுபாடு பிரச்னையாகும். உலகிலேயே மிகப் பெரிய மோசடி இதுவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement