பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக நவ.,6, 11ல் தேர்தல்: நவ.,14ல் ஓட்டு எண்ணிக்கை

புதுடில்லி: பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக நவ.,6 மற்றும் 11 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடக்கும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அவர் கூறியதாவது:
பீஹார் தேர்தலில் வன்முறையை அனுமதிக்க முடியாது. வெளிப்படையான முறையில் நேர்மையாக தேர்தல் நடத்தப்படும். பூத் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஓட்டுச்சாவடிக்கு 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்கள் பூத் அமைக்கப்படும். தேர்தல் கமிஷனால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற ஒரு செயலி அறிமுகப்படுத்தப்படும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சட்டசபைக்கு 2 கட்டங்களாக நவ.,6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும்
ஓட்டு எண்ணிக்கை நவ.,14ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
8 தொகுதிகளுக்கு நவ.,11ல் இடைத்தேர்தல்
பீஹார் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேரதல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மற்றும் நகரோட்டா,
ராஜஸ்தானின் அன்டா,
தெலுங்கானாவின் ஜூப்ளி ஹூல்ஸ்,
மிசோரமின் தம்பா,
ஒடிசாவின் நுவாபடா,
ஜார்கண்டின் கேட்சிலா,
பஞ்சாபின் தரண் தரண் ஆகிய தொகுதிகளுக்கு நவ.,11ல் இடைத்தேர்தல் நடக்கும் எனவும், நவ.,14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மேலும்
-
கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும்: கமல்ஹாசன் கருத்து
-
இத்தாலி சாலை விபத்தில் இந்தியர்கள் 4 பேர் பலி
-
கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!
-
'மூடா' முறைகேடு பண மோசடி வழக்கு: ரூ.40 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
-
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
-
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை