முடிவுக்கு வருது போர்... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக்கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்

காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்.,7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 48 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரையில், 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்ட நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை.
போர் நிறுத்தத்திற்காக அதிபர் டிரம்ப் 20 நிபந்தனைகள் அடங்கிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்தார். இதில் உள்ள ஒரு சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், பின்னர் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவித்துள்ளது.
கடந்த அக்.,6ம் தேதி எகிப்தின் ஷர்ம் எல் ஷெயிக் நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரோன் டெர்மர் இன்று கலந்து கொள்ள இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நேற்றுடன் (அக்.,7) 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகளை விடுவிப்பதுடன், காசாவில் உள்ள இஸ்ரேல் படைகளை முழுவதும் வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.




மேலும்
-
கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை
-
சாலை வசதி இல்லாமல் மலைக் கிராமங்கள் அவதி: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
-
பேட்ச் ஒர்க் செய்யும் திமுக அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்
-
கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!