மியான்மரில் ராணுவ தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

நைப்பியிதோ: மியான்மரில் பவுத்த மத விழாவில் ராணுவம் குண்டுமழை பொழிந்ததில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. இந்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அரசு ராணுவத்துடன் போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் பவுத்த மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் கிளர்ச்சிப்படை ஆதரவாளர்கள் என்று கருதிய மியான்மர் ராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், குழந்தைகள் உள்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வெடிகுண்டு தாக்குதல் நடக்க இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த மூன்றில் ஒரு பங்கு மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை
-
சாலை வசதி இல்லாமல் மலைக் கிராமங்கள் அவதி: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
-
பேட்ச் ஒர்க் செய்யும் திமுக அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்
-
கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!