எம்எல்ஏ குறித்து உருவக்கேலி ; கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவின் உயரம் பற்றி பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், உருவக்கேலி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள சட்டசபையில் பாதுகாவலர்களுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். அதனை குறிப்பிட்டு, சட்டசபையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி எம்எல்ஏவின் பெயரைக் குறிப்பிடாமல், 'எட்டு அடி உயரம் கொண்ட ஒருவர்' என்று அவர் கூறியிருந்தார்.
முதல்வரின் இந்தக் கருத்து எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் கூறுகையில், "இது அரசியல் நாகரிகமற்ற பேச்சு. எம்எல்ஏவை உருவக்கேலி செய்துள்ளார். இவர்களை முற்போக்குவாதிகள் என்று அழைப்பது அர்த்தமில்லாத ஒன்று," என்று கூறினார்.
மேலும், முதல்வரின் கருத்துக்களை சட்டசபை பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் தங்கத் தகடுகளில் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை
-
சாலை வசதி இல்லாமல் மலைக் கிராமங்கள் அவதி: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
-
பேட்ச் ஒர்க் செய்யும் திமுக அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காஷ்மீரில் 2 வீரர்கள் மாயம்: தேடும் பணியில் ராணுவம் மும்முரம்
-
கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!