துளிகள்

உள் நாட்டில் தயாராகும் 112 கப்பல்கள்
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து, 112 கப்பல்களை தயாரிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சரக்கு கட்டணமாக செலவிடப்படும் 6 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி தொகை குறைக்கும் நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளது. மேலும், வரும் 2047க்குள் 31 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளது.
பேமென்ட் சேவை: பிரிட்டன் நிறுவனம் முதலீடு
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் செயலி சேவையை துவங்க இருப்பதாக லண்டனைச் சேர்ந்த பின்டெக் நிறுவனமான ரிவோல்ட் அறிவித்து உள்ளது. இதற்காக, இந்நிறுவனம் 470 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இது குறித்து ரிவோல்ட் இந்தியாவின் சி.இ.ஓ. பரோமா சாட்டர்ஜி கூறுகையில், 'வரும் 2030க்குள் 2 கோடி பேரை, குறிப்பாக இளம் வாடிக்கையாளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இது தவிர, அன்னிய செலாவணி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளோம்' என தெரிவித்தார்.
மேலும்
-
மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
-
பாய்லர் வெடித்து சிறுமி பலி குடும்பத்தினர் மூவர் காயம்
-
ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்
-
பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்
-
மாவட்ட மாரத்தான் போட்டி கல்லுாரி மாணவி முதலிடம்
-
52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு