69 சதவீத ஒதுக்கீடு ரத்தானால் ஸ்டாலின் தான் பொறுப்பு

@quote@ தாமிரபரணி ஆற்றில், கழிவுகள் கலந்ததால், அதில் குளித்தாலே நோய் வரும் நிலை உள்ளது. நதியைப் பாதுகாக்க தி.மு.க., அரசு தவறி விட்டது. தாமிரபரணியை மற்றொரு கூவமாக மாற்ற வேண்டாம்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும். 'ஜாதி' என்ற சொல் பிடிக்காவிட்டால், 'கலைஞர் கணக்கெடுப்பு' என்ற பெயரிலாவது நடத்துங்கள். 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட ஒதுக்கீடு ரத்தானால், முதல்வர் ஸ்டாலின் தான் அதற்கு பொறுப்பு. பா.ம.க., கூட்டணி விவகாரத்தை விரைவில் நானே அறிவிப்பேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கரூர் சம்பவத்துக்கு பின், கட்சி நிகழ்ச்சிகளுக்கு, இந்தியாவில் எங்குமே இல்லாத நிபந்தனைகள் தமிழகத்தில் விதிக்கப்படுகின்றன. - அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote

Advertisement